முந்திரி பழம் பயன்கள்
🔶முந்திரி என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. முந்திரியை சாப்பிடாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முந்திரி என்றாலே அனைவருக்கும் தெரியும். ஆனால் முந்திரி பழம் என்று சொன்னால் ஒரு சிலருக்குத்தான் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.முந்திரி பழத்தில் புரோட்டீன், பீட்டா கரோட்டீன், டானின் என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. பல அதிசய குணம் நிறைந்துள்ள முந்திரி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
🥜முந்திரிப் பழத்தில் உள்ள லூட்டின் கண்களின் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்கிறது. இது சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து கண்களைப் பாதுகாத்து அதன் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
🥜இப்பழமானது கல்லீரல் உட்பட உடலின் எல்லா பாகங்களையும் சுத்தப்படுத்துகிறது. இப்பழத்தின் காரத்தன்மை கல்லீரல் உள்பட உடல் பாகங்களில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து கழிவுகளாக வெளியேற்ற காரணமாகிறது. அத்துடன் உடலின் பி. எச். அளவினை பராமரிக்கிறது. இப்பழத்தின் தோலில் உள்ள பெக்டின் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.
🥜எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை இப்பழத்தில் காணப்படுகின்றன. எனவே இதனை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணலாம்.
🥜தோல் சார்ந்த பிரச்சனையானது பாகுபாடின்றி ஆண்கள் மற்றும் பெண்கள் சந்திக்கக்கூடிய ஒன்று. ஆண்களை விட பெண்களுக்கே இந்த பிரச்சனை அதிகளவில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கடைகளில் விற்கக்கூடிய செயற்கை க்ரீம்களை அதிகமாக உபயோகப்படுத்துவதால் சில பின் விளைவுகள் ஏற்படுகிறது. தோல் பிரச்சனையை குணப்படுத்த முந்திரி பழத்தில் வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் தோலில் உண்டாகும் அரிப்பு, சுருக்கம், மற்றும் வெடிப்பு போன்றவற்றை நீக்குகிறது. குறிப்பாக அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் முந்திரி பழம் பயன்படுகிறது.
🥜முந்திரிப் பழங்களில் அதிக கொழுப்பு இருந்தாலும் அவை அனைத்துமே உடலுக்கு ஆரோக்கியமானவை. இதை நாம் சரியான அளவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை. இதில் நிறைந்துள்ள நல்ல கொழுப்புகளால் உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது நம் மூளை வளர்ச்சிக்கும், இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது.
🥜முந்திரிப் பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சத்துக்கள் உள்ளன. இவை நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. இதனால் நமது உடலால் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட முடியும்.
🥜முந்திரிப் பழங்களில் நிறைந்துள்ள புரோ அன்தோசயனின் என்னும் சேர்மம், நம் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும், இதில் தாமிரம் இருப்பதால் உடல் செல்களில் ஏற்படும் மாற்றங்களைத் தடுக்கிறது. குறிப்பாக, பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுப்பதற்கு முந்திரிப் பழங்கள் பெரிதும் உதவுகின்றன.
🥜இப்பழத்தினை உண்ணும்போது அவை கொழுப்பினை எரித்து தேவையான ஆற்றலினை வழங்குகின்றன. இப்பழத்தினை உண்டு உடற்பயிற்சி செய்யும்போது அதிகளவு கொழுப்பானது எரிக்கப்படுகிறது. இதனால் கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.
🥜முந்திரிப் பழத்தில் காணப்படும் தனித்துவமான ஃப்ளவனாய்டுகள் நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதுடன் அதனை சீராக செயல்பட வைக்கின்றன. இப்பழத்தின் சாற்றினை முறையாக பயன்படுத்துபவர்கள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளிருந்து நிவாரணம் பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு நுரையீரல் செயல்பாட்டினை சீராக்கலாம்.
🥜மாணவர்ககளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் முந்திரி பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
முந்திரி பழம் பயன்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்