-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களுக்கு தீர்வு வேண்டி, தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை, நேற்று ஞாயிற்றுக்கிழமை 47 ஆவது நாட்களாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பகுதி விவசாயிகளின் 352 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்து, தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் உற்பத்திக்காக வழங்கியதாக தெரிவித்து, ஒன்றரை மாதங்களாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
விவசாயத்தை நம்பி வாழ்ந்த எங்களை ஏமாற்றி வீதியில் இறக்கி விட்டு, அநாதரவாக்கி விட்டார்கள், மீள எமது நிலங்களை பெற்றுத்தாருங்கள், என கோரிக்கை விடுக்கின்றனர்.


