முதியோர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண்!

ஹொரணை பிரதேச முதியோர் இல்லத்தில் நாற்காலியில் சடலமாக காணப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

88 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு யிரிஉழந்துள்ளார்.

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக முதியோர் இல்லத்தின் பாதுகாவலர் ஹொரணை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க