
முதல் மூன்று மாதங்களில் 30 துப்பாக்கி சூடுகள்
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் பல்வேறு பகுதிகளிலும் 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.
