முதலையை திருமணம் செய்த மேயர்

மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சான் பெட்ரோ ஹவுமெலுலா என்ற நகரின் மேயர், முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கிறிஸ்துவ முறைபடி முதலைக்கு வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டு, ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, பாரம்பரிய இசை முழங்க வண்ணமயமாக இத்திருமண விழா நடைபெற்றது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்ததுடன், திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக மேயர் விக்டர் முதலையின் உதட்டில் முத்தமிட்டார்.

இவர் தனது நகரம் இயற்கை வளத்துடன் செழிப்பாக இருக்க வேண்டி பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.