
முதலையை திருமணம் செய்து முத்தமிட்ட மேயர்
பொதுவாக கிராமங்களில் மழை வர வேண்டும் என்பதற்காக கழுதைக்கும், மனிதர்களுக்கும் திருமணம் செய்து வைப்பதை கேள்விபட்டிருப்போம் ஆனால் இங்கு ஒரு நபர் கொஞ்சம் வித்தியாசமாக 7 வயது முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்ட செய்தி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மெக்ஸிகோவில் உள்ள சிறிய நகரான சான் பென்றோ குமாலெலுலாவின் மேயர் விக்டர் யூகோ என்பவரே முதலையை திருமணம் செய்துள்ளார்.
அந்த பகுதியில் பின்பற்றபட்டு வரும் குவாவெஸ் மற்றும் சோண்டலேஸ் என்ற இரு கலாச்சாரங்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும், இயற்கையின் அருளை பெறுவதற்காகவும் இந்த திருமணம் நடைபெற்று வருவதாக அந்த மேயர் கூறியுள்ளார்.
முதலை என்பது பூமியை பிரதிநிதித்துவ படுத்துவதாக அவர்கள் கலாச்சாரத்தில் நம்பப்படுவதாகவும், அதை திருமணம் செய்து கொள்வதன் மூலமாக தங்கள் மக்களுக்கு நன்மை வந்து சேரும் என்று தான் இந்த சடங்கை மேற்கொள்வதாகவும் மேயர் விக்டர் தெரிவித்தார்.
இந்த நடைமுறை ஒரு நம்பிக்கையாகவே பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகின்றனர் இந்த நகரில் வாழ்ந்து வரும் மக்கள்.
இதை பலர் சமூக வலைத்தளங்களில் ஆச்சரியமாக பார்த்து பகிர்ந்து மகிழ்ந்தாலும் பலரும் இது ஒரு மூடநம்பிக்கை என்று விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், சிலரோ அது அவரவர் நம்பிக்கை சார்ந்தது யாரும் அதில் தலையிலட தேவையில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
