முதலையிடம் சிக்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!
அம்பலாந்தோட்டை புழுலய பிரதேசத்தில் வளவே ஆற்றில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளார்.
75 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணை முதலை பிடித்து இழுத்த போது அருகில் இருந்தவர்கள் அலறியதில் முதலை அவரது காலை உடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் குறித்த பெண் மருத்துவமனையில் கொண்டுவருவதற்கு முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பலாந்தோட்டை, வடுறுப்பா பிரதேச வைத்தியசாலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்