முதலீட்டில் இலாபம் பெற்று தருவதாக தெரிவித்து நிதி மோசடி செய்த நபர் கைது
நிதிமுதலீட்டில் இலாபம் பெற்று தருவதாக தெரிவித்து பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த நபர் ஒருவர் கேகாலை பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றை பதிவு செய்துள்ளதாகவும், நிதி முதலீடுகளுக்காக பெரும் இலாபம் ஈட்டுவதாகவும் மக்களிடம் உறுதியளித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கேகாலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட 09 முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மே 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்