![முதலிரவில் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகம்: தந்தை கைது](https://minnal24.com/wp-content/uploads/2023/07/Untitled-Project-40.jpg)
முதலிரவில் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகம்: தந்தை கைது
மொனராகலை பூவக்கொட பிரதேசத்தில் திருமணத்தின் பின்னர் முதலிரவு அன்று கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, குறித்த பெண்ணின் தந்தை 9 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னுடைய மூத்த மகளை 13 வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரிலேயே அப்பெண்ணின் தந்தை கடந்த 27ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் 13 வயதில் அவரது தாய் கணவனிடம் சிறுமியை விட்டுவிட்டு, வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். இதனால் சிறுமி தனது தந்தையுடன் இருந்துள்ளார். இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து 2013 ஆண்டு நிறைவடையும் வரையிலும் அச்சிறுமியின் தந்தைஇ தனது மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தந்தையின் அம்மாவிடம் (பாட்டி) சிறுமி தெரிவித்ததை அடுத்து, சில காலம் பாட்டி சிறுமியுடன் வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார். அதன்பின்னர், தந்தையின் துன்புறுத்தல் நின்றுவிட்டது.
இந்நிலையில், உறவினர்களால் அப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்துக்குப் பின்னர் கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டு பெண்ணுடன் முரண்பட்டதை தொடர்ந்து இன்றைக்கு 9 வருடங்களுக்கு முன்னர், தந்தையால் தான் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது தொடர்பில் கணவனும், மனைவியும் பொலிஸில் செய்த முறைப்பாட்டு அமைய, 49 வயதான தந்தை ஒன்பது வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்