முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று
10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30க்கு சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
அத்துடன் குறித்த கொள்கை பிரகடனம் மீதான வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
