
முதலாவது உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு விஜயம் : ஜனாதிபதி இன்று இந்தியா செல்கிறார்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு விஜயமாக அவர் இந்தியா செல்லவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்தியத் தலைநகரில் இடம்பெறவுள்ள வர்த்தக மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
