முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
