
முட்டை விலை உயர்வால் நுகர்வோர் கடும் அவதி
உள்ளூர் சந்தையில் முட்டை விலை உயர்வால் தற்போது நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதன்படிஇ ஹட்டன் பிரதேசத்தில் உள்ள முட்டை கடைகளில் சிவப்பு நிற முட்டை ஒன்று 62 ரூபாவிற்கும், வெள்ளை முட்டை ஒன்று 59 முதல் 60 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று திங்கட்கிழமை முதல் மொத்த வியாபாரிகள் முட்டையின் சில்லறை விலையை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
