முட்டை விலையில் வீழ்ச்சி

சந்தையில் முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புத்தாண்டு காலத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்டது.

இதன்போது 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் முட்டை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையின் காரணமாக முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க