முட்டை திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
சிறிது காலமாக முட்டை திருட்டில் ஈடுபட்டு வந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடமிருந்து 2,110 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3,120 திருடப்பட்ட முட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்னதாக, வெலிவேரிய நகரில் உள்ள முட்டை விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து முட்டைகள் திருடப்பட்டதாக வெலிவேரிய காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளில், சிசிடிவி காட்சிகள் சோதனை செய்யப்பட்டன.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இரவு வேளைகளில் முச்சக்கர வண்டியில் வந்து திருட்டில் ஈடுபடுவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நபர் யக்கல பகுதியைச் சேர்ந்தவர் என்றும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
