முட்டைக்கு நிலையான விலை நிர்ணயிக்க கோரிக்கை

முட்டைக்கு நிலையான விலை நிர்ணயிக்கப்படாமையினால் தாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக, அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது முட்டை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அதன் செயலாளர் அனுரசிறி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலை தொடர்ந்தால் நுகர்வோர் முட்டையை கொள்வனவு செய்வதை நிறுத்தக்கூடும், என தெரிவிக்கப்படுகின்றது.