முட்டைகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது

முட்டைகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது

ஒரு மில்லியன் முட்டைகளை தாங்கிய டற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

அந்த கப்பலில் உள்ள முட்டைகள்,  அனுமதிக்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி இரண்டு மில்லியன் முட்டைகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதுடன், அதனையடுத்து ஒரு மில்லியன் முட்டைகள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டன.

இதன்படி, இதுவரை நான்கு மில்லியன் முட்டைகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன,

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்