முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சவால்
முடிந்தால் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார் .
திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.இந்நிலையில், மாகாண சபை தேர்தலை நடத்தினால், முழு நாட்டு மக்களும் அரசாங்கத்துக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்கு பதிலொன்றை வழங்க திருகோணமலை மாவட்ட மக்கள் மாத்திரமல்லாது முழு நாட்டு மக்களும் காத்துக் கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
