
முச்சக்கர வண்டி விபத்து: வெளிநாட்டு பிரஜை காயம்
-பதுளை நிருபர்-
வெலிமடை, நுவரெலிய வீதியில் இன்று வியாழக்கிழமை காலை முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு பிரஜை காயமடைந்துள்ளார்.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியான 36 வயதுடைய சீன நாட்டு பிரஜை ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த குறித்த நபர் வெலிமடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பகுதியில் இருந்து வருகைதந்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து வெலிமடையிலிருந்து நுவரெலியா சென்று கொண்டிருந்த லொறியில் வெலிமடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் அபேவிக்கிரம தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
