முச்சக்கரவண்டி விபத்து : நால்வர் படுகாயம்

பசறை பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பசறையிலிருந்து எல்டப் தன்னமலை பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று பசறை மடூல்சீமை வீதியில் மூன்றாம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், 6 வயது சிறுமி, 19 மற்றும் 41 வயதுகளுடைய இரண்டு பெண்கள், 16 வயதுடைய ஆணொருவர் என நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் ‌.

விபத்தமேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.