முச்சக்கரவண்டி விபத்தில் சகோதரர்கள் மூவர் படுகாயம்

வெள்ளவாய பெரகல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர்.

ஹல்துமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22, 23 மற்றும் 29 வயதுடைய சகோதரர்கள் மூவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் நேற்று ஞாயிற்று கிழமை இரவு முச்சக்கரவண்டியில் ஹல்துமுல்லயிலிருந்து வெல்லவாய நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக முச்சக்கரவண்டி கவிழ்ந்து வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்