முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் காயம்

இரத்தினபுரி – கிரியெல்ல பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முச்சக்கரவண்டியின் சாரதி கவனக்குறைவாக வண்டியை செலுத்தியதன் காரணமாக தனியார் பேருந்தின் மீது முச்சக்கரவண்டி மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்