Last updated on January 4th, 2023 at 06:53 am

முச்சக்கரவண்டி பஸ் விபத்தில் 7வயது சிறுமி பலி | Minnal 24 News

முச்சக்கரவண்டி பஸ் விபத்தில் 7வயது சிறுமி பலி

பதுளை கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பிட்டிய மல் சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றும் பதுளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

கஹட்டரூப்பயில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் அம்பிட்டியவில் இருந்து முத்துமாலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் அம்பிடியமல் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டியை ஓட்டி சென்ற பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிழ் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

மரணித்த சிறுமியின் தாய் உட்பட மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரணித்த சிறுமி முத்துமாலை கொவிபொல கெந்தகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு பஸ் சாரதி கஹட்டரூப்ப பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கஹட்டரூப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.