முச்சக்கரவண்டி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் நான்கு பேர் படுகாயம்!

-மஸ்கெலியா நிருபர்-

முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நால்வர் படுகாயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, டயகம நகரத்தில் இருந்து வெஸ்ட் டயகம நட்போன் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் இடம் பெற்றுள்ளது.

சுமார் 200 அடி பள்ளத்தில் குறித்த முச்சக்கரவண்டி விழுந்ததில், அதில் பயணித்த நான்கு பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், என டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து குறித்து டயகம பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.