முச்சக்கரவண்டி கெப் வாகனத்துடன் மோதி விபத்து

வாதுவை, பொஹத்தரமுல்ல வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி மற்றும் கெப் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.