முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து

-பதுளை நிருபர்-

பதுளை – பசறை டெமேரியா வீதியில் இன்று புதன்கிழமை முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டெமேரியா மீரியபெத்த பகுதியை சேர்ந்த 32 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

பசறை பகுதியில் இருந்து டெமேரியா நோக்கி பயணித்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியும் டெமேயியா மீரியபெத்த பகுதியில் இருந்து பசறை நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் பசறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காயமடைந்த மற்றைய நபர் பசறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையில் அதிகாரி  தெரிவித்தார்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை பசறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்