முச்சக்கரவண்டியும் பாரவூர்தியும் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு!

பெலவத்தை – நெலுவ பிரதான வீதியில் 7 கணுவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியும் பாரவூர்தியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து காரணமாக முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க