
முக்கிய நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில்
மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக 18 பிரதான நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
லபுகம மற்றும் கலடுவ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு போதுமானது எனவும் கண்காணிப்பு அமைப்பின் கீழ் 16 நீர் வழங்கல் அமைப்புகளில் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
