முகம் பளபளப்பா இளமையோட இருக்க இயற்கை வழிகள்

அனைத்து பெண்களுக்குமே அழகாக இருக்க வேண்டும் என்பதே ஆசை. அதற்காக நிறைய விடயங்களை முயற்சியும் செய்கின்றனர்.

சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள பாலாடை மாஸ்க் உபயோகப்படுத்தலாம். காரணம் பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது.

அதுமட்டுமல்லாமல் இது சருமத்திலுள்ள முகப்பருக்களை உருவாக்கும் கிருமிகளையும் நீக்கிவிடும். சருமத்தில் ஏதேனும் மாசு, மருக்கள் இருக்கும்பட்சத்தில் பாலாடையை முகத்தில் தேய்த்து நன்றாக ஸ்க்ரப் செய்யலாம்.

முறை ஒன்று:

பாலாடை , தேன் – 1 தேக்கரண்டி பாலாடையுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்த்து நன்றாகக் கலக்கி, முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் இளம் சூடான நீரில் கழுவ வேண்டும்.

பாலாடை , தேன்

முறை இரண்டு:

பாலாடை , மஞ்சள்- 1 தேக்கரண்டி பாலாடையுடன் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி, முகத்தில் பூசி 10 நிமிடங்களின் பின்னர் கழுவவும்.

மஞ்சள்

முறை மூன்று:

பாலாடை , கற்றாழை – 2 தேக்கரண்டி பாலாடையுடன் 2 தேக்கரண்டி கற்றாளை ஜெல்லை கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்களின் பின்னர் கழுவவும்.

 

 

பாலாடை , கற்றாழை

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்