முகமாலை பகுதியில் பாரிய விபத்து- வீடியோ இணைப்பு

கிளிநொச்சி முகமாலை ஏ9 வேம்படுகேணி புகையிரத கடவை பகுதியில் இரு டிப்பர் வாகனங்கள் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் மோதியதில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுளள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த டிப்பர் வாகனமும் கிளிநொச்சியிலிருந்து பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து மக்களை இறக்குவதற்கு குறித்த பகுதியில் நின்ற போது அதனை டிப்பர் வாகனம் முந்தி செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றதுள்ளது.

டிப்பர் வாகன சாரதிகள் காயங்களுடன் பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.