முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்
முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்
முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்
💦பருக்கள் ஏன் வருகிறது? சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக எண்ணெயை உற்பத்தி செய்யும் போது, அழுக்குகள் அந்த எண்ணெயுடன் சேர்ந்து சருமத் துளைகளை அடைத்து பருக்களை உண்டாக்குகின்றன. இந்த பருக்கள் பொதுவாக மறையும் போது தழும்புகளை விட்டுச் செல்லும். இந்த தழும்புகள் ஒருவரது அழகைக் கெடுக்கும் படி இருக்கும். இந்தக் கட்டுரையில் முகத்தில் உள்ள பருக்களின் தழும்புகளை வேகமாக போக்கும் சில இயற்கை வழிகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
🔺பருக்களால் வந்த தழும்புகளைப் போக்குவதற்கு வெள்ளரிக்காய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு துண்டு வெள்ளரிக்காயை எடுத்து நேரடியாக முகத்தை மசாஜ் செய்யுங்கள். இதனால் வெள்ளரிக்காய் சாறு தழும்புகளைப் போக்க உதவுவதோடு, முகத்தின் புத்துணர்ச்சியும் மேம்படும். ஒருவர் முகத்தை வெள்ளரிக்காய் ஜூஸ் கொண்டு தினமும் ஒரு முறை கழுவி வந்தால், தழும்புகள் நீங்குவதோடு, சருமம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.
🔺முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து நன்கு அடித்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், தழும்புகள் மறைவதோடு, சரும நிறமும் மேம்பட்டு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
🔺ஒரு சிறிய பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து, சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பருக்கள் விட்டுச் சென்ற தழும்புகள் மீது தடவுங்கள். சில நிமிடங்கள் இந்த கலவையை அப்படியே ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் இரண்டு முறை என செய்து வந்தால், மிகவும் வேகமாக பருக்கள் விட்டு சென்ற தழும்புகள் மறைந்துவிடும்.
🔺தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இது பருக்கள் விட்டுச் செல்லும் அசிங்கமான மற்றும் கருமையான தழும்புகளைப் போக்க உதவியாக இருக்கும். அதற்கு ஒரு தக்காளித் துண்டை, பாதிக்கப்பட்ட இடத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும். பின் 15-20 நிமிடம் கழித்து, முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் தவறாமல் செய்து வந்தால், தழும்புகள் காணாமல் போய்விடும்.
🔺எலுமிச்சையிலும் தக்காளியைப் போன்றே வைட்டமின் சி ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் இது மிகச்சிறந்த ப்ளீச்சிங் தன்மையையும் கொண்டது. எனவே இது பருக்களின் தழும்புகளை எளிதில் போக்க வல்லது. அதற்கு எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை கருமையான பரு தழும்புகளின் மீது தடவி 10-15 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், பருக்கள் மற்றும் அதன் தழும்புகள் நீங்கி, முகத்தின் பொலிவும் மேம்பட்டுக் காணப்படும்.
முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்