கண்டி – மஹியங்கனை வீதி மீளத் திறக்கப்பட்டது

உடுதும்பர – கஹடகொல்ல பகுதியில் மண்சரிவு மற்றும் கல் உருளுதல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை வீதி இன்று காலை 6 மணிக்கு மீளத் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியை இரவு நேரங்களில் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என கருதி நேற்று மாலை 6 மணி முதல் கண்டி – தென்னக்கும்புர சந்தி மற்றும் ஹசலக பாலத்திற்கு அருகில் 12 மணித்தியாலங்கள் குறித்த பகுதி மூடப்பட்டிருந்தன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்