மீன்பிடி வலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்பு
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயபுரம் பகுதியில் மீன்பிடி வலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டது.
மண்டைதீவு கடற்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த மீன் பிடி வலைகளில் வடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
இந்நிலையில் அதிரடிப்படையின் உதவியுடன் குறித்த வெடி பொருட்கள் அகற்றப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
குறித்த வெடி பொருட்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.