மீன்பிடி படகில் இருந்து போதைப்பொருள் மீட்பு

கொழும்பு மேற்கு கடற்பிராந்தியத்தில் நீண்டநாள் பயணித்த மீன்பிடி படகில் இருந்து போதைப்பொருள் தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் தொகை தற்போது கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.