மீன்பிடிக்க சென்றவரை தாக்கிய யானை

கந்தகெட்டிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தகெட்டிய பகுதியை சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உமாஓயாவில் தமது நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்று வீடு திரும்பும் போதே யானைத் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்