மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு!
-கிளிநொச்சி நிருபர்-
கரைச்சி கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரைச்சி கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இரணைமடுகுள கிழக்கு கரையில் அமையவுள்ள குறித்த மண்டபத்திற்கான அடிக்கல் முற்பகல் 9.14 மணி தொடக்கம் 10.30மணி வரையுள்ள சுபவேளையில் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளர், கிராம சேவகர், கரைச்சி கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள், சாந்தபுரம் சங்க அங்கத்தவர்கள், நலன் விரும்பிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.