மீனவர்கள் பயணித்த படகு விபத்து

வாதுவ, பொத்துபிட்டிய பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது .

மூன்று மீனவர்களை ஏற்றிச் சென்ற ‘நேத்துல புதா’ மீன்பிடிக் கப்பல் இன்று காலை கடலுக்குச் சென்று மீன் பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது .

பொத்துப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் விபத்திலிருந்து உயிர்தப்பியுள்ளனர்.

மற்றுமொறு மீன்பிடி படகு மூலம் அவர்கள் மீட்கப்பட்டு வஸ்கடுவ கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.