
மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பாக காணப்படுவதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாபம் தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
