மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம்!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

6 மாத காலம் அமுலாகும் வகையில் இந்த எரிபொருள் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

இதன்படி, டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றுக்காக 25 ரூபாவை நிவாரணமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.