மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது

அடுத்த மாதம் முதல் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிவித்துள்ளது.

பொருத்தமான மீனவர்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெறுவதாக சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி தெரிவித்துள்ளார்.

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை மீள ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன. முன்னர் இத்திட்டம் செயலிழந்தபோது, சுமார் 60ஆயிரம் மீனவர்கள் இதன் பலன்களைப் பெற்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காப்புறுதி திட்டத்தை மீண்டும் தொடங்கும்போது, இதனைவிட அதிகமான மீனவர்களுக்கு பயனளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.