மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டார் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ

பிற மதங்களை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று  புதன்கிழமை  உத்தரவிட்டுள்ளார்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ டிசம்பர் முதலாம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை டிசம்பர் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.