மீண்டும் மின்கட்டண அதிகரிப்பு!
இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் மீண்டும் ஒருமுறை மின்கட்டணத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை கோரியுள்ளது.
கடந்த 21ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு மின்சார சபையின் பொது முகாமையாளர் ஜி.ஏ.டி.ஆர்.பி. செனவிரத்ன மின்கட்டணத்தை அதிகரிக்க கடிதம் ஒன்றை அனுப்பி, இதனை அதிகரிக்காவிட்டால் இவ் வருடத்தின், அடுத்த சில மாதங்களுக்கான செலவுகளை ஈடுகட்ட முடியாது என தெரிவித்துள்ளார்.
மின்சார சபைக்கான வருமானத்தை 3,300 கோடி ரூபாவால் அதிகரிக்கும் வகையில் இந்தக் கட்டண அதிகரிப்பு அமுலாக வேண்டுமென மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. இந்த வகையில் கடந்த பெப்ரவரி மாதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
எனினும், கடந்த 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணம் மீண்டும் 25 வீதத்தால் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்