
மீண்டும் மழை
நாட்டின் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று அலை வலுவடைவதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாட்டின் பல மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி வடக்கு வடமத்திய கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை வீழ்ச்சி கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

