
மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்
நாடு முழுவதும், இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துமூல அனுமதியின்றி வீதிகள், ரயில் பாதை, பொதுப்பூங்கா, பொது விளையாட்டு மைதானம், கடற்கரை ஆகியவற்றில் யாரும் கூட்டமாகவோ, தேவையற்ற விதத்திலோ நடமாட அனுமதி இல்லையென, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
