மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஆபத்தான நிலையில் ’அக்போ’

திரப்பனை வண்ணம் மடுவ ஆற்றுக்கு அருகில் இருந்து அக்போ என்ற யானை மீது நேற்று சனிக்கிழமை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் தற்போது யானையின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் யானையின் இடப்பக்க காலில் காயம் ஏற்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் யானையின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்