மீண்டும் திறக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தபாலகங்கள்
அம்பாறை மாவட்ட தபாலக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் வழமை போன்று இயங்குகின்றது.
நுவரேலியா உட்பட இதர தபால் அலுவலகத்தை விற்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த கோரி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மறுநாள் புதன்கிழமை வரை இரு நாட்கள் (48 மணித்தியாலங்கள்) நாடு பூராகவும் தபாலகங்களின் பணிகள் நிறுத்தப்பட்டு அடையாள வேலை நிறுத்தம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று இடைநிறுத்தப்பட்டு வழமைபோன்று தபாலகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
ஒன்றினைந்த தொழிற்சங்க முன்னனியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த அடையாள வேலை நிறுத்த போராட்டமானது ‘அஞ்சலின் பாரம்பரியத்தை விற்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது இரு நாட்களாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதான தபாற்கந்தோர் உட்பட 7 தபால் நிலையங்களின் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இதே வேளை இப்போராட்டத்தை முன்னிட்டு அரசாங்கமானது தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்