
மீண்டும் அமெரிக்காவில் ஸ்மார்ட் வாட்ச் விற்பனை
விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்த பின்னர் அமெரிக்காவில் ஸ்மார்ட் வாட்ச்களின் (Smart Watch) விற்பனையை மீண்டும் தொடங்குவதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
அதன்படி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (Apple Watch Series 9 ) மற்றும் அல்ட்ரா 2 (Ultra 2) ஆகியவை அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
புத்தாண்டுகாலத்தில் ஆப்பிள் வாட்சை (Apple Smart Watch) வாடிக்கையாளர்களுக்கு திருப்பித் தருவதில் மகிழ்ச்சி அடைவதாக அப்பிள் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
