மீண்டும் அதிகரிக்கும் கொவிட் – 19

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் கொவிட் – 19 நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, இலங்கையில் உள்ள சுகாதார அமைச்சு பொது மக்களை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சமிதா கினிகே “தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ள போதிலும், பாரிய தடுப்பூசி இயக்கத்தில் நாம் ஈடுபட்டுள்ளதால், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட முடியாது என உத்தரவாதம் இல்லை என்று அவர் கூறினார். “எவரும் வைரஸால் பாதிக்கப்படலாம்; இருப்பினும், வெற்றிகரமான தடுப்பூசி இயக்கத்தின் காரணமாக கடுமையான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தடுப்பூசி மூலம் மக்கள் பெற்றுள்ள வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கருத்தில் கொண்டு, பரிசோதனை திறனை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று வைத்தியர் கினிகே வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும் அனைவரும் முகக்கவசத்தை அணியுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்