
மியான்மார் சைபர் கிரைம் : 3 பேர் கைது
மியான்மார் சைபர் கிரைம் எனப்படும் ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபரான சீன பிரஜை உள்ளிட்ட 3 பேரும் குற்றப் புலனாய்வு திணைக்கத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மியான்மாரின் சைபர் கிரிமினல் எனப்படும் பகுதியில் உள்ள முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
