
மியான்மாரில் உள்ள சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள்
மியான்மாரில் உள்ள சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை மீட்பதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாக மியான்மாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
மியன்மாரில் சைபர் குற்றவாளிகளின் பிடியிலிருந்து 30 இலங்கையர்கள் மீட்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.